கவி நான்கு
இனிய ரமலான் வாழ்த்துகள் 25-04-2020 அதிகாலையிலே அல்லாஹ்ன் அனுமதியோடு சொல்லால் வசைபாடும் நாவில் எல்லா உணவையும் தூர விலக்கி ஒரு நேர உணவில் பொய் மறந்து மெய்யோடு தொழுகையின் தூரம் அறிந்து தூயவனாம் இறையருள் வேண்டி அண்ணல் நபியாம் துதி பாடி அனைத்துத் துன்பம் தனை மறந்து பிறை கண்டு பிணி போக்கி மாலை வரை நோன்பிருந்து மகத்துவம் புரியும் மாந்தனே ரமலான் நோன்பு பலன் நமை சேர இயன்றதை செய்வோம் எளியவற்கு இணங்க எளியவரை வலியவராக்குவோம் இத்திருநாள் ரமலான் மாதத்தில் நல்லதொரு நோன்பில் சொர்க்க வாசல் கண்டிடுவாய...