உழைக்கும் மக்கள் ஊமைகளாய்.

01-05-2020




உழைக்கும்    மக்களை    ஊமைகளாய்    

ஓரிடத்தில்   உறைய   வைத்த   

உத்தமர்களே    பிழைப்பே   இல்லையென்ற  போது

உழைப்பவர்    தினம்   எதற்கு

 உழைத்த   மாடுகள்  ஓய்ந்து  விட்டன

 காடு  கரை   கழனியெங்கும்

கட்டிடமாய்  போனதென்ன

நாலு  சுவத்துக்குள்   விட்டத்தை   பார்த்து

வட்ட  மடிப்பானேன்    உழைப்பு   மறக்கலாச்சு

கார்ப்பரேட்   கம்பணிகள்   நாளும்   திறக்கலாச்சு  

மனிதன்   உழைப்புக்கு   இங்கு  மரியாதை  நின்னு   போச்சு

இயந்திரம்   வந்தமையால்   மனிதன்   சுதந்திரம்   போச்சு

நூ(ற)று நாள்   திட்டம்   கூட   படுக்க    வசதியாச்சு

நம்ம  காடு  கரை எல்லாம்  கானல்   நீராய்   மாரிப்போச்சு

உழைத்த   உடம்புக்கு   ஓய்வுதான்   உரிமையா(ச)ச்சு

இதில்   உழைப்பாளர்   தினம்    ஒரு  கேடாலாச்சு  

கவி  கண்ணன்  ஓசூர்





வெளி நாட்டு வாழ்க்கை

வெளி   நாட்டு   வாழ்க்கை   வேதனை   நிறைந்த  வாழ்க்கை

உள்  நாட்டில்    தனது   உழைப்பை   மதிக்காத

மாந்தரிடம்  தனது   செல்வாக்கை   நிலை  நாட்ட

வியர்வை   சிந்துபவனின்    உப்புக்கண்ணிர்    வாழ்க்கை

மகன்   மகள்   திருமணமோ

உடன் பிறந்தோர் திருமணமோ

தான்   வரமுடியாதென்று   தெரிந்தும் 

பணத்தோடு   பாசத்தையும்   சேர்த்து  அனுப்பும்  பாவப்பட்ட  வாழ்க்கை

ஊருக்கு  செல்லும்  போது   உதவிக்கரம்   நீட்டாத  உறவுகள்

ஊருக்கு  திரும்ப வருகையில் போலியாக  காட்டும் பல வேட  உறவுகள்

தொலை   தூர   பயணத்தில்  தொலை  தொடர்பு   மட்டும்

இல்லையென்றால்   இனிக்காது   எங்கள்   வாழ்க்கை

சொந்தம்   என்று  குரல்  கொடுக்க வரும் கூட்டமெல்லாம்

நாங்கள்   கொண்டு  வரும்  பொருளின்   மீதே   நாட்டம்   வரும்

சாப்பிட்டாயா   இல்லையா என்று  கேட்க   மனம்    இங்கு  இல்லை

மத்தவங்க   அக்கரையை நாங்க   விட்டு    போறதில்ல

உற்ற    உறவை  தொட்டு   பேச   முடிய  வில்லை

உள்ளூர   வச்ச  ஆசையை    அடையத்தான்   முடியல

ஆடம்பர வாழ்க்கைக்காக அடகு   வச்சோம்    அயல்   நாடடில்

அப்பனும்    சுப்பனும்   வாழ்ந்த      நம்மூரு

ஆனந்த  வாழ்க்கைக்கு      இங்கு   இடம்   ஏது

காசு  பணம்தான்   வாழ்க்கையினு     நாங்க  வந்தோம்

பாசம்   ஒன்னு   இருக்குதுனு   உணர்ந்து கொண்டோம்

பட்ட   பாடு   போதுமடா  எங்க  குல சாமி

பாட்டன்   பூட்டன்   பூர்வீகம்   இருக்க    இனி  பயணம்   ஏன்டா  சாமி

தன்னிகரற்ற  தமிழகத்தை  வளப்படுத்த   முயலுவோம்

தாய்  மண்ணின்    மகத்துவத்தை   அயல்   நாட்டானுக்கு உணர்த்துவோம்


                                                                                                                       கவி  கண்ணன்


என்று விடியும்

இன்று   விடியும்   நாளை   விடியும்

என்ற    ஏக்கப்பார்வையில்  ஏழையின்    நெனப்பு

எப்படி   பார்த்தாலும்   நாங்கள்

வகுத்த    வட்டத்துக்குள்   விழுவாய்   என்பது  ஆழ்வோர் கணிப்பு

புலம்பும்   புலம்பல் புரியாத   போது

சாவின்   விளிம்பின் மேல்    இருப்பவனை

வீண் சண்டைக்கு   அழைப்பானேன்

கானல்   நீராய்ப்   போன   வாழ்க்கை

காணாமல்   போனால்  என்ன

காற்றில்   கரைந்து   போனால்   என்ன

தொலைந்து  போன   வாழ்வை

துடைப்பம்   கொண்டு   பெருக்கி    என்ன   பயன்

கவி கண்ணன்



ஒன்றில்லாமல்    ஒன்று   இல்லை

உண்மை   என்ற   சொல்   உண்மையானால்

பொய்ம்மை   என்ற  சொல்   இங்கு   ஏது

பகல்   மட்டுமே   இருக்குமேயானால்

இரவு    என்பது   இங்கு   ஏது

சூரியன்    மட்டுமே    இருக்குமேயானால் 

சந்திரன்    என்பது   இங்கு   ஏது

இன்பம்     மட்டுமே   வாழ்க்கையானால்

துன்பத்தின்    வலி  இங்கு  ஏது

பிறப்பு    மட்டுமே   நியதியென்றால்

இங்கு   இறப்பு      சாத்தியமேது

ஆரம்பம்    என்று   அறிந்த  போது 

முடிவு   என்பது   இங்கு    இல்லாமல்   ஏது

இளமை    என்பது   நிரந்தரமானால்

முதுமை   என்பது     பிறந்திருக்கலாகாது

நட்பு      மட்டுமே   வாழ்க்கையானல்

பகைமை    என்பது   இவ்வுலகில்   ஏது

காய்   ஒன்று     இங்கு  இருந்தால் 

கனி     ஒன்று  கனியாமல்   போகுமா

வந்தவறெல்லாம்    இங்கு   தங்கிவிட்டால்

வாழ்க்கைதான்    நிரந்தரம்  ஆகுமா

கவி  கண்ணன்


ஏழ்மையின் எதிரொலி

படுத்தாலும்   உறக்கமில்லே

பசித்தாலும்   உணவுமில்லே

பாழாய்ப்  போன   எனை  நம்பிய    உறவுகள்

ஏக்கத்து   நிக்கும்   வேளையிலே

ஏறெடுத்துப்  பார்க்க   நாதியில்லே

என்ன   என்னவோ   கனவு   கண்டேன்   வாழ்க்கையிலே

எண்ணிலடங்கா    ஆசையோடு   இருக்கையிலே

எமன்    ஏறெடுத்து   பார்த்தானே    என்  வாழ்க்கையிலே

நாலு   காசு  பணம்   சேர்க்கவில்லே  வாழயிலே

காலத்தைத்தான்   செலவழிச்சேன்   உறவுகளின்   மனங்களிலே

பணத்தோடு   பணம் சேரலியே

பாவப்படட   என்  வாழ்க்கை    பாதாளம்  நோக்கி   போகயிலே

மனம்   வெறுத்த   என்  வாழ்க்கை   

மண்ணில்   மங்கிடலாகுமோ

கவி  கண்ணன்

Comments