கவி - தொடர் இரண்டு
அன்னையர் தின வாழ்த்துகள்.
10/05/2020
தன்னுயிர் கொடுத்து இன்னுயிர் காப்பவளே
பொன் பொருள் இல்லையென்றாலும்
பொக்கிசமமாய் தன் பிள்ளையை பார்ப்பவளே
தனக்கு உணவில்லாத போதும் எமக்கு உணவளிப்பவளே
பிள்ளை முகம் கண்டே கொள்ளை காரணம் கேட்பவளே
அழுகுரல் கேட்டதும் அடிவயிறு பதறி வருபவளே
அப்பனின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஏளனமாய் போனவளே
பசி பொருக்காத பிள்ளைக்கு உன் கையால் கொடுக்கும்
பச்சத்தண்ணீரும் ருசி மாறி பசியாத்தும் பானம் அல்லவா
தன் வயிற்றில் சுமந்து வாழ்வு கொடுத்த சுமைதாங்கியே
உமது சுமையை இறக்க நான் பிறந்தேன் வரம் வாங்கியே
சுரந்த பால் உன் ரத்தமன்றோ
சுவை கூடி இனித்ததம்மா அந்நாளில்
இன்று சுவையூட்டும் உன் பேச்சு சிலிர்க்குதம்மா இந்நாளில்
பத்து மாசம் வைத்திருந்து பெற்றவளே என் தெய்வம்
எமை பெற்றபோது நீ எடுத்ததென்னவோ மறு ஜென்மம்
மறு ஜென்மம் என்று ஒன்று இருக்குமேயானால்
மீண்டும் உன் மடிதனில் தவழ்ந்திட வேண்டுமம்மா
இப்பிறவியில் தராத நல் வாழ்வை
அப்பிறவியில் உனக்குத் தர வேண்டுமம்மா
கவி கண்ணன்
என் தாயே காமாட்சி
பாசம் காட்டி வளர்த்தவளே என் தாயே காமாட்சியம்மா
நற்கனிவுடனே வளர்த்துவிட்டாய்
எனை ஆளாக்கிய அம்மா
பார் போற்ற நானிருந்தும் உனை ஊர் போற்ற காத்திடலை நானம்மா
கஞ்சோ கூலோ கரைத்து குடுப்பாய் தேவாமிர்தம்
என் கானா பசியும் கரைந்து போகுமே அந்நேரம்
உன் பாதம் தொட்டு பணிய வேண்டும் எந்நேரமும்
என் பாவங்களை கழுவ வேண்டும் உன் பாதங்களில் அது பொன்னேரமாகிடும்
எனைக் கருவரை சுமந்த தாயே தனயனாகினேன் இப்பிறவியில்
நான் பட்ட கடனை நான் என்று தீர்ப்பேன் எப்பிறவியில்
தூரத்தில் நான் இருந்தும் துணைவருது உன் நினைவு
தூயவளே என் தாயே துணை நில்லு வழிச் செல்ல
கவி கண்ணன்
Comments
Post a Comment