கவி நான்கு
பெற்றோர்கள் தின வாழ்த்த 01-06-2020
வண்ண மலராய் பெத்தெடுத்து
எண்ணமெல்லாம் எழிலடைய செய்த பெத்தவங்களே
வாரி அணைத்து வாஞ்சையுடன்
வழி நடத்திய வாழும் தெய்வம் தகப்பனாரே
தாய்மொழியை தமக்குறைத்த தாயுமானவளே
ஈ எரும்பு கடிக்காம ராத்தூக்கம் தொலைச்சவங்களே
அறிவை அள்ளி தெளிச்ச அன்பான அப்பாவே
மிடுக்காக உடை உடுத்த மீளா கஷ்டம் பட்டவங்க
நான் ஆளாகி வருவேனுன்னு ஆசைப்பட்டு வளர்த்தவங்க
பெத்து பேரு வச்ச பெரும் பாக்கியம் ஆனவங்க
முத்தாய் நான் வளர பல முன்னெடுப்பை கண்டவங்க
ஓயாத உழைப்பாலே ஓய்ந்து போனவங்களே
நோகாம பாத்துக்கிற பெத்த பிள்ளை நான் இருக்கேன்
நோய் நொடி வந்தாலும் தளராம தாங்கிக் கொள்ள நான் இருக்கேன்
பொத்தி வச்ச ஆசைகளை மொத்தமாக சொல்லுங்களே
அத்தனையும் செய்து முடிச்சாலும் நீங்க பெத்த கடன் தீராதைய்யா
என்னை சுமந்த தாயே உன்னை சுமக்க வரம் ஒன்று தாயே
அனைத்து பெத்தவங்களுக்கும் இது சமர்ப்பணம் 🙏🏻🙏🏻🙏🏻
Comments
Post a Comment