கவி மூன்று
செவிலியர் தினம் - 12-05-2020
தாயின் வயிறு பிரிந்த பின்னே
நாம் தவழ்வது செவிலியர் கைகளில் முன்னே
வெள்ளாடையில் நம் வேதனைகளைத் துடைக்கும் பெண்ணே
எந்நோய் என்றாலும் எதிர்த்து நிற்கும் சிங்கப்பெண்ணே
உறவுகளே தள்ளி நிற்கும் நேரத்தில்
உரிமையுடன் பணிகளைத் தொடங்கும் வெள்ளைத் தேவதையே
அச்சம் தவிர்த்து ரத்தம் கூட துடைத்து
உயிர் துச்சமென வாழும் பிரம்மனின் மறு பிறவிகளே
ஆகாய வானிலே எங்களை ஆசீர்வதிக்க வந்த வெள்ளை நிற தேவதைகளே
ஆறெழு ஜென்மமும் ஆறாது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐💐
கவி கண்ணன்
தாசி
அழகு நிறைந்த கலை ஓவியம் நீ
கவிஞன் வடிக்கும் சிலைக் காவியம் நீ
ஆண்மை விளைந்த வீரனை வீழ்த்தி சிரிப்பவள் நீ
விவரம் அறியா வேந்தனையும் உலகை அறியச் செய்பவள் நீ
சில்லரை விழும் முன்னே சிரிப்பலையை விழச்செய்பவள் நீ
ஆண்டி ஆனாலும் அரசன் ஆனாலும் அரவணைத்து போபவள் நீ
நாடு நகரை கடந்த நளபாதினி நீ
நயாக்கரா நீர்வீழ்ச்சியின் சுழல் ஆட்சி நீ
நாலு சுவரே உலகம் என்பவள் நீ
நாலு காசே விடீயல் என்பவள் நீ
நாடு நலம் பெற நம்பினோர் சுகம் பெற
தன்னை உருக்கி பெண்மை வாழச்செய்பவள் நீ
விலை மதிக்க முடியா விலை மகள் நீ
விவரம் அறியச்செய்யும் அலை மகள் நீ
இல்லறப்பெண் இனிமையுடன் வாழ
உன் இளமை தொலைப்பவள் நீ
அழகு இருக்கும் வரை என் அரசாங்கம் என்பவள் நீ
அழகு முடிந்த பின்னே வறுமையில் வாடுபவள் நீ
கரை புரண்டோடும் காமத்தை கட்டுடல் கொண்டு தடுப்பவள் நீ
தர்ம பத்தினி தழைத்தோங்க தன்னையே அழிப்பவள் நீ
அன்பை காட்டி ஆசை தீர்க்கும உலக அழகியே
உன் ஆன்மா ஆணினத்தை ஆசிர்வதிக்கட்டும்
கவி கண்ணன்
Comments
Post a Comment